மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு + "||" + Online consultation for admission of students in Dindigul Government Women's Arts College

திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு

திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு
திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்கியது.
திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. எனினும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. இதையடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மேலும் கொரோனா பரவல் குறையாததால், ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்காக மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவ- மாணவிகள் ஆன்லைனில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அதன்படி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நேற்று தொடங்கியது. இதில் கல்லூரி முதல்வர் லதா பூர்ணம் தலைமையில் பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவிகளிடம் கலந்தாய்வு நடத்தினர். மேலும் தரவரிசை பட்டியலின்படி மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல்நாளான நேற்று இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது மாணவிகளின் மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பேராசிரியர்கள் சரிபார்த்தனர். இதில் சேர்க்கைக்கு தேர்வான மாணவிகளிடம், கட்டணம் செலுத்தம்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுவதால் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.