மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு + "||" + Wage worker dies after being electrocuted while trying to dismantle a severed power line

அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு

அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு
குன்னம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது 2 குழந்தைகள் அனாதையானார்கள்.
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). விவசாய கூலி. இவர் நேற்று வயலுக்கு உரம் போடுவதற்காக கூலி வேலைக்கு சென்றார். பின்னர் வயலில் உரம் தெளித்து விட்டு வரும் போது, பாதையில் ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. அந்த கம்பியில் மின்சாரம் வருவதை அறியாமல், பெரியசாமி அதனை கையால் எடுத்து அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அப்போது, பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின்ஊழியர்களின் மெத்தனம்

மின் கம்பி அறுந்து விழுந்து 4 நாட்கள் ஆகிறது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் மின் ஊழியர்கள் வந்து சரி செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மின்வாரிய ஊழியர்களின் மெத்தனத்தால் தான், இந்த சம்பவம் நடந்து உள்ளது என்றும் தெரிவித்தனர். பெரியசாமியின் மனைவி முல்லைக்கொடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பெரிசாமிக்கு அமர்நாத்(12) அபிஷேக்(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் முறையே 8-ம் வகுப்பும், 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தற்போது பெரியசாமியின் குழந்தைகள் அனாதையாகி பெற்றோர் ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர் என உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சுருக செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரல்வாய்மொழி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
ஆரல்வாய்மொழி அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
2. சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்
சேலத்தில் குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கரூரில் பரிதாபம்
கரூரில் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் சாவு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் பரிதாபமாக செத்தார்.