மாவட்ட செய்திகள்

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற தயாராகுங்கள் அமைச்சர் பேச்சு + "||" + AIADMK in the forthcoming assembly elections. Get ready to work actively with the youth choirs Minister talk

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற தயாராகுங்கள் அமைச்சர் பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற தயாராகுங்கள் அமைச்சர் பேச்சு
வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற தயாராகுங்கள் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி ஜோதி மகாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ஜெயலலிதா பேரவை மாநில இணைசெயலாளர் சிங்காரம், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.சேகர், மாதப்பன், இளைஞர் பாசறை மாநில இணைசெயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் வரவேற்று பேசினார்.


கூட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும், வேடச்சந்தூர் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பு உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் கொள்கைகள், நோக்கங்களை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த பாசறை லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பாசறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி இளைஞர் பாசறை குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றியை உறுதி செய்ய இளைஞர்-இளம்பெண்கள் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

இப்போதே தயாராகுங்கள்

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் குறித்து இளைஞர் பாசறையினர் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக இருந்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலை பின்பற்றி இளைஞர் பாசறையினர் வாக்குச்சாவடி வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள், இளம் பெண்களை அ.தி.மு.க.வில் இணைக்க பாடுபட வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. இளைஞர் பாசறையினர் தீவிரமாக பணியாற்ற இப்போதே தயாராகுங்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், பாஞ்சாலை கோபால், சாந்தி பெரியண்ணன், ஒன்றிய செயலாளர்கள் என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், என்.பி.பெரியண்ணன், எம்.பி.செல்வராஜ், சி.கோபால், எம்.கே.வேலுமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், பாப்பாரப்பட்டி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் வி.மாதேஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாநில இணைசெயலாளர் கே.பி.ஆனந்த் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல; தி.மு.க. எம்.பி. சண்முகம் மேலவையில் பேச்சு
புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க. மேலவை எம்.பி. சண்முகம் பேசினார்.
2. பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்துஉணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
3. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
‘நீட்‘ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
4. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
5. புளியங்குடி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்
புளியங்குடி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.