மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ செல்லாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Madurai High Court orders invalid 'key answer' for sub-inspector examination

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ செல்லாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ செல்லாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ‘கீ-ஆன்சர்’ செல்லாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,

தமிழகத்தில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது. முதலில் வெளியான ‘கீ ஆன்சர்’படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இந்த மதிப்பெண் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எனக்கு வேலை கிடைத்து இருக்க வேண்டும். கடைசியாக வெளியான ‘கீ ஆன்சர்’படி வினா எண் 47-க்கான விடை மாறி இருந்தது.


இதனால் எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் ஆகும் வாய்ப்பு பறிபோனது. கடந்த 1947-க்கு பின்பு இந்திய ரூபாய் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என்ற கேள்விக்கு 3 முறை என்பது தான் சரியான விடை. பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டதால், அதை சரியான விடை என எடுத்துக்கொண்டு மதிப்பெண் வழங்கி உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, மதிப்பு குறைப்பு என தவறுதலாக கருதி மதிப்பெண் அளித்துள்ளனர். எனவே சரியான விடை எழுதிய என்னை, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

செல்லாது என உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. எனவே “பணமதிப்பு குறைப்பு 4 முறைதான்” என குறிப்பிட்டு, அது சரியான விடை என்பது தவறான கருத்து. நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் சரியான விடை அளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டு இருக்கிறது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் நிபுணர் குழுவில் இருக்க வேண்டும். தவறான விடையின் அடிப்படையில் வெளியான ‘கீ ஆன்சர்’ தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர் சரியான விடையளித்து உள்ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, அடுத்தகட்ட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
2. உலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு
உலகின் தூய்மையான கடற்கரைகள் என்ற பெருமையை பெறுவதற்கான பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
3. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. தென்காசியில் கொட்டும் மழையில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள்
தென்காசியில் கொட்டும் மழையில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வந்தனர்.
5. கடும் கட்டுப்பாடுகளுடன் ‘நீட்’ தேர்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6 ஆயிரத்து 233 பேர் எழுதினர்
கடும் கட்டுப்பாடுகளு டன் நேற்று நடந்த நீட் தேர்வை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6,233 பேர் எழுதினர்.