முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 31 Aug 2020 3:45 AM IST (Updated: 31 Aug 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

செங்கோட்டை,

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதே போல் இந்த ஆகஸ்டு மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று கடைசி ஞாயிற்றுக்கிழமை தளர்வு இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி 2 மாவட்டங்களிலும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

செங்கோட்டையில் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. செங்கோட்டை மெயின் ரோடு, மேல பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடியது. இதேபோல் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், வள்ளியூர், திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வாகன போக்குவரத்தும் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள்.

Next Story