மாவட்ட செய்திகள்

புளியங்குடியில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் - விவசாயி விஷம் குடித்து தற்கொலை + "||" + In Puliyankudi Because the daughter married for love Farmer commits suicide by drinking poison

புளியங்குடியில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் - விவசாயி விஷம் குடித்து தற்கொலை

புளியங்குடியில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் - விவசாயி விஷம் குடித்து தற்கொலை
புளியங்குடியில் மகள் காதல் திருமணம் செய்ததால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 64) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்கள் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இளைய மகளும், உறவினரான வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.


இளைய மகளின் காதலுக்கு மாயாண்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் அவர்களுக்கு கடந்த 28-ந் தேதி வீட்டில் திருமணம் நடந்தது.

இதனால் மனமுடைந்த மாயாண்டி, இளைய மகளுக்கு திருமணம் முடிந்ததும், மதியம் வீட்டில் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மாயாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்ததால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.