மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை தந்தை- மகன்கள் உள்பட 4 பேர் கைது + "||" + Four persons, including father and sons, have been arrested for stabbing a youth to death near Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை தந்தை- மகன்கள் உள்பட 4 பேர் கைது

மயிலாடுதுறை அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை தந்தை- மகன்கள் உள்பட 4 பேர் கைது
மயிலாடுதுறை அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கன்னித்தோப்பு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் விஜய்(வயது24). பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் விஜய் தனது மோட்டார் சைக்கிளில் மாப்படுகை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்த மனோகரின்(50) மீது விஜய் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் உரசியது. இதனால் விஜய்க்கும் மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மனோகர் மற்றும் அவர் தரப்பினர் விஜய்யை தாக்கினர். இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் அவரது தரப்பினர் மனோகர் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டனர்.

அப்போது மனோகர் தரப்பினர் ஆயுதங்களால் விஜய் மற்றும் அவரது அண்ணன் விக்னேசை தாக்கினர். இதில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார்.

4 பேர் கைது

தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து

மனோகர், அவரது மகன்கள் செல்வமணி(24), அன்புச்செல்வன் (22), அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜ்(44) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அவயம்பாள்புரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜய்யும், கைது செய்யப்பட்டவர்களும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கத்தியால் குத்தி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாப்படுகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய காரை துரத்தி பிடித்த போலீசார் வடமாநில வாலிபர் கைது
வேப்பந்தட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்திய காரை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
2. உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் பாதுகாப்பு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
3. மல்லூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது திடுக்கிடும் தகவல்கள்
மல்லூர் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கள்ளக்காதலை கைவிடாததால் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது
வேடசந்தூர் அருகே, கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...