முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 31 Aug 2020 5:15 AM IST (Updated: 31 Aug 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை போலீசார்் எச்சரித்து அனுப்பினர்.

திருவாரூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது இந்த நிலையில் இந்த மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டது

முழு ஊரடங்கையொட்டி அத்்தியாவசிய பொருட்களான காய்கறி, மளி்கை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இறைச்சி, மீன் கடைகளும் மூடப்பட்டன. ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் வெளியூர்களில் வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டனர். கடைவீதி, பழைய பஸ் நிலையம், நகை கடை சந்து, தெற்கு வீதி போன்ற அனைத்து பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பாதுகாப்பு பணி

ஆட்டோ, கார், வேன் என அனைத்து வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டன. போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எந்தவித காரணமின்றி தேவையற்று வெளியில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உரிய விசாரணை நடத்தப்பட்்டு, அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story