மாவட்ட செய்திகள்

அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று மந்திரி சசிகலா ஜோலேவுக்கும் கொரோனா - இருவருக்கும் வீட்டு தனிமையில் சிகிச்சை + "||" + Arake Gyanendra Viral infection to MLA Corona to Minister Sasikala Jole

அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று மந்திரி சசிகலா ஜோலேவுக்கும் கொரோனா - இருவருக்கும் வீட்டு தனிமையில் சிகிச்சை

அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று மந்திரி சசிகலா ஜோலேவுக்கும் கொரோனா - இருவருக்கும் வீட்டு தனிமையில் சிகிச்சை
கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி சசிகலா ஜோலேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல் அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது வீடுகளில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. பெலகாவி மாவட்டம் நிப்பானி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா ஜோலே. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் சசிகலா ஜோலே பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். நேற்று அவரது மருத்துவ அறிக்கை வெளியானது. இதில் சசிகலா ஜோலேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் டாக்டரின் ஆலோசனையின்பேரில் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்து மந்திரி சசிகலா ஜோலே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், டாக்டர்களின் அறிவுரையின்பேரில் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான அரகே ஞானேந்திராவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வி.ன் கார் டிரைவருக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த, அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ. தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார். மந்திரி சசிகலா ஜோலே, அரகே ஞானேந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக அளவில், மந்திரி சசிகலா ஜோலே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6-வது மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.