இளம்பெண், ஆண் நண்பர் காரில் கடத்தல் 9 பேர் கும்பல் கைது
இளம்பெண், அவரது ஆண் நண்பரை காரில் கடத்தி சென்ற 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புனே,
புனே சேனாபதி பாபட் மார்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 23 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் வணிக வளாகம் அருகே இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் அருகே கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் இளம்பெண்ணிடம், தங்களை போலீசார் எனக்கூறினர். பின்னர் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்காக காரில் ஏறும்படி மிரட்டினர். ஆனால் இளம்பெண் காரில் ஏற மறுப்பு தெரிவித்தார். இதனால் காரில் இருந்த கும்பல் இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை குண்டு கட்டாக தூக்கி காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். இதனால் அவர்கள் சத்தம் போட்டனர்.
இவர்களது சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் காரின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் காரின் பதிவெண் நம்பரை கொண்டு துப்பு துலக்கினர். இதில், புனே-சத்தாரா நெடுஞ்சாலையில் சிர்வால் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட காரை மடக்கினர். இதையடுத்து காரில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். மேலும் காரில் இருந்த 9 பேர் கும்பலை கைது செய்தனர்.
இதற்கிடையே இளம்பெண்ணுடன் கடத்தி செல்லப்பட்ட ஆண் நண்பரை கத்ரத் குகை அருகே அவர்கள் இறக்கி விட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கைதான 9 பேரும் சத்தாரா வாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த வாலிபர்களில் ஒருவருக்கும், கடத்தப்பட்ட இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில் இளம்பெண் வேறொரு வாலிபருடன் பழகியதால் சந்தேகம் அடைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கைதானவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story