நதியில் தவறி விழுந்து வாலிபர் சாவு காப்பாற்ற முயன்ற சகோதரரும் பலியானார்


நதியில் தவறி விழுந்து வாலிபர் சாவு காப்பாற்ற முயன்ற சகோதரரும் பலியானார்
x
தினத்தந்தி 1 Sept 2020 5:31 AM IST (Updated: 1 Sept 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

காம்வாரி நதியில், தவறி விழுந்து வாலிபர் சாவு காப்பாற்ற முயன்ற சகோதரரும் பலியானார்.

தானே,

மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் சபாஜ் அன்சாரி(வயது24). தனியார் நிறுவன ஊழியர். இவரது தம்பி ஷாஆலம் அன்சாரி (21). ஓட்டல் மேலாண்மை படித்து வந்தார். சம்பவத்தன்று அண்ணன், தம்பி இருவரும் தனது தாயாருடன் பிவண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் காம்வாரி நதியில் மீன் பிடிக்க சென்றனர். நதி அருகே இருந்த பாறாங்கல் விளிம்பில் நின்று கொண்டு சபாஜ் அன்சாரி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் நதியில் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாஆலம் அண்ணணை காப்பாற்ற நதியில் குதித்தார். இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நதியில் இறங்கி இருவரையும் தீவிரமாக தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story