திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Sep 2020 6:30 AM GMT (Updated: 1 Sep 2020 6:14 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த 62 வயது ஆண், தாராபுரத்தை சேர்ந்த 23 வயது பெண், தாராபுரம் உடுமலை ரோட்டை சேர்ந்த 55 வயது பெண், அவினாசிரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, அம்மாபட்டியை சேர்ந்த 32 வயது பெண், தொட்டிபாளையம் லேபர் காலனியை சேர்ந்த 26 வயது ஆண், 22 வயது ஆண், 20 வயது ஆண், 26 வயது ஆண், சாமளாபுரத்தை சேர்ந்த 60 வயது ஆண், மூலனூரை சேர்ந்த 30 வயது ஆண், பிக்பஜார் தெருவை சேர்ந்த 60 வயது ஆண், காந்திநகர் ஜீவா காலனியை சேர்ந்த 44 வயது பெண், கோவில்வழியை சேர்ந்த 52 வயது ஆண், மடத்துக்குளத்தை சேர்ந்த 60 வயது ஆண், எஸ்.ஆர்.நகரை சேர்ந்த 42 வயது ஆண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 30 வயது ஆண், இந்திராநகரை சேர்ந்த 15 வயது சிறுமி, பொங்கலூரை சேர்ந்த 57 வயது பெண், கன்னிவாடியை சேர்ந்த 28 வயது ஆண், 28 வயது ஆண், வெள்ளகோவிலை சேர்ந்த 8 வயது சிறுமி, 60 வயது பெண், 54 வயது ஆண், 16 வயது சிறுவன், 25 வயது ஆண், 29 வயது ஆண், முத்தூரை சேர்ந்த 32 வயது ஆண், முத்தூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த 20 வயது பெண், அய்யம்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், 20 வயது ஆண், குண்டடம் நால்ரோட்டை சேர்ந்த 21 வயது ஆண், தாராபுரம் நேருநகரை சேர்ந்த 50 வயது பெண், உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை சேர்ந்த போலீசான 34 வயது ஆண், உடுமலை சிவசக்திகாலனியை சேர்ந்த 45 வயது ஆண்.

சாமிநாதபுரத்தை சேர்ந்த 60 வயது ஆண், வெங்கடேஷ்வராநகரை சேர்ந்த 45 வயது பெண், பூலுவப்பட்டியை சேர்ந்த 63 வயது ஆண், பூலுவப்பட்டி அம்மன்நகரை சேர்ந்த 37 வயது ஆண், 27 வயது பெண், 1 வயது சிறுமி, 55 வயது பெண், லக்குமாணிக்கன்பட்டியை சேர்ந்த 50 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 63 வயது ஆண், தில்லைநகரை சேர்ந்த 31 வயது பெண், உடுமலை காந்திநகரை சேர்ந்த 63 வயது பெண், டி.வி.எஸ். லே அவுட்டை சேர்ந்த 69 வயது ஆண், உடுமலை வாசவிநகரை சேர்ந்த 20 வயது பெண், 18 வயது பெண், பல்லடத்தை சேர்ந்த 55 வயது ஆண், கருமாரம்பாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண், பல்லடம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த 20 வயது ஆண், ராக்கியாபாளையம்பிரிவை சேர்ந்த 37 வயது ஆண், வெள்ளியங்காட்டை சேர்ந்த 56 வயது ஆண், கண்ணமானிக்கனூரை சேர்ந்த 53 வயது ஆண், மடத்துக்குளம் எஸ்.எம்.காலனியை சேர்ந்த 57 வயது ஆண், வெள்ளகோவில் திருவள்ளுவர்நகரை சேர்ந்த 51 வயது பெண், ராக்கியாபாளையம்பிரிவை சேர்ந்த 40 வயது பெண், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 44 வயது ஆண், பி.என்.ரோட்டை சேர்ந்த 57 வயது ஆண், 47 வயது பெண், வெள்ளகோவிலை சேர்ந்த 61 வயது ஆண், பத்மாவதிபுரத்தை சேர்ந்த 61 வயது ஆண், 52 வயது பெண், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த 54 வயது பெண், கணியாம்பூண்டியை சேர்ந்த 32 வயது பெண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், 7 வயது சிறுமி, சேரம்பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண், கொங்குநகரை சேர்ந்த 49 வயது ஆண் ஆகிய 70 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

Next Story