தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Sept 2020 12:35 PM IST (Updated: 1 Sept 2020 12:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறந்ததையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை,

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 165 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story