சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
புதுச்சேரி,
புதுவை நகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கொரோனா காலகட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை கம்பன் கலையரங்கத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நகராட்சி ஊழியர் போராட்டக்குழு நிர்வாகி விநாயகவேல் தலைமை தாங்கினார். போராட்டக்குழு நிர்வாகிகள் ஆனந்த கணபதி, கஜேந்திரன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story