ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கலெக்டர் அருண் ஆய்வு
x
தினத்தந்தி 1 Sep 2020 10:45 PM GMT (Updated: 1 Sep 2020 10:45 PM GMT)

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த கொரோனா பரிசோதனை முகாம்களில் கலெக்டர் அருண் ஆய்வு நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மருத்துவக்குழு மற்றும் விஞ்ஞானிகள் குழுவை புதுவைக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. மத்தியக் குழுவும் புதுவையில் ஆய்வுகள் நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையில் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனைகளை செய்யும் கூறப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

இதன் அடிப்படையில் நேற்று ரெட்டியார்பாளையம், கொசப்பாளையம், லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த முகாம்களில் புதுவை கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பல இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story