மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 384 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district, corona infection affected 384 people in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 384 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 384 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 384 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா தொற்றால் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம், கண்டிகை, ஆலப்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 6 பேர், மறை மலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் சண்முகா நகரில் வசிக்கும் 43 வயது பெண், 45 வயது ஆண், 65 வயது முதியவர், நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த 10 வயது சிறுமி, 78 வயது மூதாட்டி, 20 வயது வாலிபர் உள்பட 41 பேர் பாதிக்கப்படடடனர்.


மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரமனூர் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் 46 வயது ஆண், 23 வயது வாலிபர், பாரதியார் தெருவை சேர்ந்த 30 வயது வாலிபர், பாவேந்தர் சாலையை சேர்ந்த 25 வயது வாலிபர் உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டு ள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது. இவர் களில் 23 ஆயிரத்து 284 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 795 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியை சேர்ந்த 26, 29, 23, 26 வயதுடைய ஆண்கள், 27 வயது பெண், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண், 60 வயது மூதாட்டி, 38, 48 வயதுடைய ஆண்கள், சோமங் கலம் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், 36 வயது பெண், ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இவர் களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 418 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்தது. 1857 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 ஆயிரத்து 128 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1514 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 409 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கோவையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவையில் 20 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
3. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் எம்.எல்.ஏ. குணமடைந்தார்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதனுக்கு கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா இதுவரை 4,535 பேர் குணமடைந்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.