மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் திறப்பு + "||" + Opening of 111 libraries in Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கூடும் அனைத்து நிறுவனங்கள், பொது இடங்கள் மூடப்பட்டன. அதன்படி நூலகங்களும் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து பல்வேறு கட்டமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது தமிழக அரசு நூலகங்களை திறக்க அனுமதி அளித்து உள்ளது.


நூலகங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதி நேர நூலகங்கள் உள்பட 131 நூலகங்கள் உள்ளன. இதில் பகுதி நேர நூலகங்கள் தவிர 111 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில் நூல் இரவல் பிரிவு, சொந்த நூல்கள் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு ஆகிய 3 பிரிவுகள் மட்டும் இயங்கின. நாளிதழ்கள், பருவ இதழ்கள் பிரிவு செயல்படவில்லை. முழுநேர நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையும், கிளை நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஊரக பகுதிகளில் உள்ள நூலகங்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் திறக்கப்பட்டன. அதன்பிறகு நூலகங்கள் மூடப்பட்டன.

நூலகங்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் நூலகத்துக்குள் வாசகர்கள் அனுமதிக்கப்பட்டனர். நூலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதே போன்று அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
3. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
4. சென்னையில் நாளை மதுக்கடைகள் திறப்பு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்படும்
சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை நடைபெறும் என்றும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் யாதகிரி-ராய்ச்சூர் இடையே போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.