விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2020 12:32 AM GMT (Updated: 2 Sep 2020 12:32 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

எட்டயபுரம்,

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகளில் மோசடி நடந்துள்ளது. இதை கண்டித்தும் விவசாயிகளுக்கான நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க தாலுகா செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தொடங்கி வைத்து பேசினார். சி.பி.எம். கிளை செயலாளர்கள் முருகேசன், மாரிமுத்து, சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க தலைவர் கண்ணன், பொருளாளர் கண்ணன், ஆறுமுகம், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கயத்தாறில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாலமோன், விவசாய சங்க ஒன்றிய செயலர் சீனிப்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராசையா, சுந்தரி, அக்கம்மாள், செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் புதிய தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கை குறித்து பேசினார்.

இதில் கருங்குளம் ஒன்றிய செயலாளர் மணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அர்ச்சுண பெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினர் ஜோதி, நகர செயலாளர் பாலமுருகன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், டேவிட், மணி, கந்தவேல், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story