ஈரோட்டில் பொது ஊரடங்குக்கு பிறகு பள்ளிவாசல்களில் தொழுகை தொடங்கியது
பொது ஊரடங்குக்கு பின்னர் ஈரோட்டில் பள்ளிவாசல்களில் நேற்று தொழுகை தொடங்கியது.
ஈரோடு,
தமிழகத்தில் கொரோனா பொது ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன. தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் நேற்று முன்தினம் முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஈரோட்டில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நேற்று தொடங்கியது. ஈரோடு பெரிய பள்ளிவாசலில், அரசு குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றி முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு அறிவித்து உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டு பள்ளிவாசல்களை திறந்து, தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழுகையில் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த விதமான நோய் பாதிப்புகளும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் தொழுகைக்கு வரவேண்டாம்.
முக கவசம்
100 சதுர மீட்டர் அளவுக்கு 20 பேர் மட்டுமே இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிவாசல் வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்வது கட்டாயம். பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள நீர் தொட்டியை யாரும் கை, கால்கள் கழுவ, முகம் கழுவ பயன்படுத்தக்கூடாது. கழிவறைகளையும் உபயோகிக்கக்கூடாது.
கட்டுப்பாடு
அவரவர் கொண்டு வரும் பொருட்களை பள்ளிவாசல்களில் எங்கும் வைக்கக்கூடாது என்கிற பல்வேறு கட்டுப்பாடுகளை அளித்து இருக்கிறோம். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து தொழுகை நடைபெறும். குறிப்பாக தற்போதைய கொரோனா பாதிப்பால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வேலை இன்மை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் காரணமாகவே அரசு இந்த விதிமுறை தளர்வினை அளித்து இருக்கிறது. எனவே அதை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று எந்த வகையிலும் அதிகரித்து விடாமல் இருக்க, அரசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா கூறினார்.

Related Tags :
Next Story