கொரோனா பிரச்சினையை தீர்ப்பதைவிட அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதில் அரசு ஆர்வம் தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
கொரோனா பிரச்சினையை தீர்ப்பதைவிட அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதில் அரசு ஆர்வமாக உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அரசு கொரோனா பிரச்சினையை தீர்ப்பதைவிட அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதில் ஆர்வமாக இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
நிறுத்தி வைக்கலாம்
தற்போது இந்த அரசாங்கத்தில் உள்ள பிரச்சினை ஒட்டுமொத்த அரசும் பணி இடமாற்றங்களால் தான் நிரம்பி உள்ளது. பணி இடமாற்றங்கள் வழங்குவது தான் அரசின் ஒரே பணியாகி உள்ளது. பணியிடமாற்றம் முக்கியமானது தான். ஆனால் அதனால் பெரிய மாற்றங்கள் ஏற்பட கூடாது. அப்படியானால் அதை ஒரு வடருத்திற்கு நிறுத்தி வைக்கலாம். கொரோனா பிரச்சினைக்கு இடையே பணியிடமாற்றங்கள் ஒரு ஆண்டு காத்திருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story