கிராபட் மார்க்கெட்டில் பயங்கரம் டிரைவர் கைது சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதி 5 பேர் பலி


கிராபட் மார்க்கெட்டில் பயங்கரம் டிரைவர் கைது சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதி 5 பேர் பலி
x
தினத்தந்தி 3 Sept 2020 4:41 AM IST (Updated: 3 Sept 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

கிராபட் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி 5 பேர் பலியாகினர்.

மும்பை,

மும்பை கிராபட் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் நடைபாதையில் ஏறி அதில் நின்றவர்கள் மீதும் மோதியது. இதையடுத்து கார் அங்கிருந்த ஓட்டல் சுவரில் மோதி நின்றது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 2 பேர் காரின் அடியில் சிக்கிக்கொண்டனர். ஒருவர் காரின் மேற்புறத்திலும், மற்றொருவர் கார் மோதிய வேகத்தில் ஓட்டலுக்குள்ளும் தூக்கி வீசப்பட்டார். இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் கம்லேஷ் சிங்(21) உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சமீர் சையத்(வயது46) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர் கம்லேஷ் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கார் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

Next Story