திருநங்கைகள் கொலை வழக்கு: கைதான 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை
திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை,
நெல்லையை அடுத்த பேட்டை நரசிங்கநல்லூர் திருநங்கைகள் காலனியில் வசித்து வந்த திருநங்கைகள் பவானி (வயது 28), அனுஷ்கா (24) மற்றும் காரியாண்டியைச் சேர்ந்த முருகன் (30) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து மாயமானார்கள். இதனால் சக திருநங்கைகள் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், சந்தேகத்தின்பேரில் ரிஷிகேஷ் என்ற தங்கவேல், செல்லத்துரை என்ற ராஜா, சுனோவின் ஆகியோரை பிடித்து சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில், பவானி, முருகன் ஆகியோர் தங்களுக்கு குழந்தை தத்தெடுத்து தருவதற்காக, தங்கவேலிடம் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தை வாங்கிய அவர், குழந்தையை தத்து எடுத்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதேபோன்று அனுஷ்கா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கவேலிடம் வற்புறுத்தி வந்தார்.
இதையடுத்து தங்கவேல், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து அனுஷ்கா, முருகன், பவானி ஆகிய 3 பேரையும் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடுத்தடுத்து கொலை செய்து, அவர்களது உடல்களை சாக்குமூட்டைகளில் கட்டி, பாளையங்கோட்டை கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த கிணறுகளில் வீசியது தெரியவந்தது.
இதுதொடர்பாக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், ராஜா, சுனோவின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் காவலில் விசாரணை
திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான தங்கவேல் உள்ளிட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், இன்ஸ்பெக்டர் ஜென்சி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாபு, கைதான தங்கவேல், ராஜா, சுனோவின் ஆகிய 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் கள் 3 பேரையும் நேற்று முன்தினம் மாலையில் சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீண்டும் சிறையில் அடைப்பு
இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கவேல் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணையை முடித்து கொண்ட போலீசார், பின்னர் அவர்களை நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகு சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தங்கவேல் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் அவர்கள் 3 பேரையும் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story