சமூக வலைதளங்களில் போலீசார் கருத்துகளை பதிவிடக் கூடாது ஐ.ஜி. முருகன் வேண்டுகோள்


சமூக வலைதளங்களில் போலீசார் கருத்துகளை பதிவிடக் கூடாது ஐ.ஜி. முருகன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Sept 2020 4:00 AM IST (Updated: 4 Sept 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் போலீசார் கருத்துகளை பதிவிடக் கூடாது என்று தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட போலீசாரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமை தாங்கினார்.

நெல்லை சரக போலீஸ்டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் பேசியதாவது:-
இதுவரை துப்பு துலங்காத வழக்குகளில், போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தலைமறைவாக இருக்கும் ரவுடிகளையும் பிடிக்க வேண்டும். ரவுடிகள், குற்றவாளிகள் ஆகியோரை போலீசார் கைது செய்யும்போது, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சமூக வலைதளங்களில் போலீசார் தேவையற்ற, சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடக் கூடாது. அதனை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களுடன் நல்லுறவை பேணும் வகையில், போலீசாரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story