மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா 12-ந் தேதி டெல்லி செல்கிறார்
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 12-ந் தேதி டெல்லி செல்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 15 மாதங்கள் ஆகிறது. 34 உறுப்பினர்களை கொண்ட மந்திரிசபையில் தற்போது முதல்-மந்திரி உள்பட 28 பேர் உள்ளனர். அதில் 6 இடங்கள் காலியாக உள்ளன. எம்.எல்.சி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோர் ஏற்கனவே போட்ட ஒப்பந்ததப்படி மந்திரி பதவிக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மந்திரிசபை விஸ்தரிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக எடியூரப்பா வருகிற 12-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் பல்வேறு துறை மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து, கர்நாடகத்திற்கு வர வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து பேசுகிறார். மழை பாதிப்புக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்க உள்ளார்.
அதன் பிறகு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளார். பா.ஜனதா மேலிடத்தின் அனுமதி கிடைத்ததும் இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

Related Tags :
Next Story