பேரளம் அருகே, மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தல்; 4 பேர் கைது
பேரளம் அருகே மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வாளூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த தரங்கம்பாடி அருகே உள்ள கிளியனூர் மேல தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது35), கீழ தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஆத்தூர் பள்ளிக்கூடம் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த கிளியனூரை சேர்ந்த சிவன்ராஜ் (23), உமர் முக்தா (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story