கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sept 2020 3:45 AM IST (Updated: 4 Sept 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, ஓசூர் பகுதியில் 29ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 33 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 6 ஆண்கள், 4 பெண்கள் என 10 பேருக்கும், கிருஷ்ணகிரி பகுதியில் 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 பேருக்கும், கெலமங்கலம் பகுதியில் ஒரு ஆண், 6 பெண்கள் என 7 பேருக்கும், ஊத்தங்கரை பகுதியில் 6 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல் பர்கூர் பகுதியில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேருக்கும், மத்தூர் பகுதியில் ஒரு ஆண், 3 பெண்கள் என 4 பேருக்கும், வேப்பனபள்ளி பகுதியில் 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேருக்கும், சூளகிரி பகுதியில் 3 பெண்களுக்கும், வெலகல்நத்தம் பகுதியை சேர்ந்த 2 ஆண்கள், காரிமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் என மொத்தம் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,337 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 55 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story