எருமப்பட்டி, மோகனூர் ஒன்றிய பகுதிகளில், திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு
எருமப்பட்டி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எருமப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் சிறிய உர மைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.69 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். இதில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பணிபுரிவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ரூ.2 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளுக்குட்பட்ட 82 கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பேட்டப்பாளையம் ஊராட்சியில் கிராயூர் கிராமத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், சரவணன் உள்பட பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story