மறைந்த பூசாரிக்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்
விழுப்புரம் அருகே மறைந்த பூசாரிக்கு கோவில் கட்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் பழமைவாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகாலம் பூசாரியாக இருந்து தொண்டு செய்தவர் வரதராஜூலு. இவரின் பரம்பரையினரே இக்கோவிலுக்கு பூசாரியாக இருந்து வந்துள்ளனர். வரதராஜூலு தனது 96-வது வயதில் அதாவது கடந்த 2011-ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன்கள் கண்ணன், பக்தவத்சலம், நாராயணன் ஆகியோர் தற்போது கோவில் பணிகளை செய்து வருகின்றனர். இந்த கோவிலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு நந்தி, சிவலிங்கம், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கோவிலின் அருகே உள்ள பொது இடத்தில் சிறிய அளவிலான கோவில் ஒன்றில் வரதராஜூலுவுக்கு சிலை வைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடு செய்து வருவது புதுமையாக இருந்தது.
இதுகுறித்து, மறைந்த கோவில் பூசாரி வரதராஜூலு மகன்களில் ஒருவரான நாராயணனிடம் கேட்டபோது, எங்கள் தந்தை மிகுந்த ஆச்சாரமாக வாழ்ந்தார். அவர் விட்டுச்சென்ற பணிகளை நானும் என் சகோதரர்களும் செய்து வருகிறோம். அவருக்கு நாங்கள் பொது இடத்தில் கோவில் அமைத்தோம். அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டு வழிபடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றார். மேலும் இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், வரதராஜூலுவின் பக்தியை கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டுள்ளோம். முக்காலத்தையும் உணர்ந்தவர் போல அவ்வப்போது அருள்வாக்கு சொல்வார். அவர் சொல்வது நடந்துள்ளது. அதனால் அவரையும் நாங்கள் வணங்குகிறோம். வயதில் மூத்தவர்களை வணங்குவதில் எவ்வித தவறும் இல்லை என்பார்கள். அந்த வகையில் எங்கள் கிராமத்தில் மூத்தவரான இவருக்கு கோவில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்து வணங்கி வருகிறோம் என்றனர்.

Related Tags :
Next Story