110 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவுப்பொருட்கள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
110 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவுப்பொருட்கள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னி(வயது 110). இவர் தனது மூத்த மகன் கலியமூர்த்தியுடன்(75) வசித்து வருகிறார். இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வருவது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பொன்னி யின் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் மூதாட்டிக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் உடை ஆகியவற்றை பரமசாந்தி என்ற அமைப்பினர் உதவி யுடன் வழங்கினார். மேலும் மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாதாமாதம் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மேலும் மூதாட் டிக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதிய தொகையை காலதாமதமின்றி விரைவாக அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தாசில்தார் முத்துகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா மற்றும் செந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு, முக கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடை பிடிப்பது மற்றும் கொரோனா குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Related Tags :
Next Story