மராட்டியத்தில் நாள்தோறும் புதிய உச்சம் மேலும் 19 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா பாதிப்பு 378 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 19 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 378 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. மாநிலத்தில் பாதிப்பு கடந்த சில நாட்களாக தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் நேற்று இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 19 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 63 ஆயிரத்து 62 ஆகி உள்ளது. இதில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 773 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 72.51 ஆக உள்ளது.
இதேபோல மாநிலத்தில் மேலும் 378 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 964 ஆகி உள்ளது.
புனே, தானே
மாநிலத்தில் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் பிம்பிரி சிஞ்வட்டில் புதிதாக 1,053 பேருக்கும், புனே மாநகராட்சியில் 1,689 பேருக்கும், புறநகரில் 858 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புனே மாநகராட்சி, புறநகரில் புதிதாக 78 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
தானே மாவட்டத்தை பொறுத்தவரை கல்யாண் டோம்பிவிலியில் புதிதாக 558 பேருக்கும், நவிமும்பையில் 501 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தானே புறநகரில் மேலும் 304 பேருக்கும், தானே மாநகராட்சியில் 294 பேருக்கும், உல்லாஸ்நகரில் 24 பேருக்கும், பிவண்டியில் 25 பேருக்கும், மிரா பயந்தரில் 228 பேருக்கும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story