செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 370 பேர் பாதிப்பு இதுவரை 450 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 370 பேர் பாதிப்பு இதுவரை 450 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:07 AM IST (Updated: 5 Sept 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 370 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரமனூர் யூனியன் சாலை பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞர், 48 வயது பெண் உள்பட 31 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் 31 வயது பெண், 8 வயது, 2 வயது சிறுமிகள், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த 6 வயது சிறுமி உள்பட 45 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காயரம்பேடு விஷ்னுப்பிரியா நகர் பகுதியில் வசிக்கும் 57 வயது ஆண் உள்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 654 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 797 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 827 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 427 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 313 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 42, 59, 20, 31, வயதுடைய ஆண்கள் 55 வயதுடைய பெண், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், எழிச்சூர் பகுதியை சேர்ந்த 64, 36, 47, 30, வயது ஆண்கள், 55 வயது பெண் ஆகியோர் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 973 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 532 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story