மாவட்டத்தில் கருவூல பெண் ஊழியர் உள்பட 75 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,427 ஆக அதிகரிப்பு


மாவட்டத்தில் கருவூல பெண் ஊழியர் உள்பட 75 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,427 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:45 AM IST (Updated: 5 Sept 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கருவூல பெண் ஊழியர் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,427 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 3 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டதால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,352 ஆனது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் 2 பேர், அரசு பள்ளி ஆசிரியர், கருவூல பெண் ஊழியர், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர், அஞ்சலக ஆய்வாளர், ஆயுதப்படை போலீஸ்காரர் மற்றும் கூட்டுறவுத்துறை டிரைவர் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று நாமக்கல்லில் 18 பேர், திருச்செங்கோட்டில் 5 பேர், ராசிபுரத்தில் 5 பேர், நாரைகிணறில் 4 பேர், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், பாச்சல் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,427 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

Next Story