ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை


ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
x
தினத்தந்தி 6 Sept 2020 4:15 AM IST (Updated: 5 Sept 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, வ.உ.சிதம்பரனார் கொள்ளுப்பேத்தி செல்வி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, யூனியன் துணை தலைவர் லட்சுமணபெருமாள், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி அழகிரி என்ற கோபி, வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், கீழமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் கண்ணன், பெரியமோகன், கருப்பசாமி, ஆறுமுகச்சாமி, யூனியன் ஆணையாளர்கள் ஹேலன் பொன்மணி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வினர் வ.உ.சி. சிலைக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வ.உ.சிதம்பரனார் கொள்ளு பேத்தி செல்வி அவரது கணவர் முருகானந்தம் வ.உ.சிதம்பரனார் இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஓட்டபிடாரம் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு வ.உ.சி. இளைஞர் கூட்டமைப்பு சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சிவலிங்கம் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story