தூத்துக்குடியில் பிறந்த நாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடியில் பிறந்த நாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 6 Sept 2020 4:15 AM IST (Updated: 5 Sept 2020 11:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பி.மோகன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், அவைத்தலைவர் திருப்பாற்கடல், இணைச்செயலாளர் செரினா சி.த.பாக்கியராஜ், துணை செயலாளர்கள் வசந்தாமணி, சந்தனம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர்கள் பி.என். ராமகிருஷ்ணன் (தெற்கு), பொன்ராஜ் (வடக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா தலைமை தாங்கி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில அமைப்பு செயலாளர்கள் இரா.ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனே ாகரன், வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வ.உ.சி. உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடி கே.வி.கே.நகரில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சி. உருவப்படத்துக்கு கே.வி.கே.நகர் இந்து முன்னணி பொறுப்பாளர் அரிராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அந்த பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனர்.

நிகழ்ச்சியில் இந்து ஆட்டோ முன்னணி சிவலிங்கம், நெல்லை கோட்ட இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரா, முருகன், பாஸ்கர், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கீழுர் அய்யலு தெரு வ.உ.சி. இளைஞர் பேரவை மற்றும் சைவ சமுதாய சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் வேதநாயகம், செயலாளர் ஜானகிராமன், சைவநெறி காந்தி, சைவ வேளாளர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், சைவ சமுதாய சங்க செயலாளர் அருணாசலம், பொருளாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Next Story