போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு: நடிகை ராகிணி திவேதி 2-வது குற்றவாளி ‘சப்ளை’ செய்த வெளிநாட்டு வாலிபர் கைது-பரபரப்பு
போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்ததாக நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ராகிணி திவேதி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இவர்களுக்கு போதைப் பொருள் ‘சப்ளை’ செய்ததாக வெளிநாட்டு வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், நடிகர், நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வீரேன் கண்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காட்டன்பேட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்திய விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவல்களின் பேரில் நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் முதல் குற்றவாளியாக சிவபிரகாஷ் பெயரும், 2-வது குற்றவாளியாக நடிகை ராகிணி திவேதியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக வீரேன் கண்ணா, பிரசாந்த் ரங்கா, வைபவ் ஜெயின், ஆதித்யா ஆல்வா, லோம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரிஜு, அஸ்வின், ரவிசங்கர், ராகுல், வினய் ஆகிய 10 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீதும் என்.டி.பி.எஸ்.(போதைப்பொருள் தடுப்பு) சட்டப்பிரிவு 21, 21 சி, 27 ஏ, மற்றும் இந்திய சட்டப்பிரிவு 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கூடிய விரைவில் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான நடிகை ராகிணி திவேதி உள்பட 4 பேரையும் போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நேற்று ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் லோயம் பெப்பர் சம்பா(வயது 33) என்று தெரியவந்தது. இவர், நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது கன்னட திரை உலகத்தினர் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரவி சங்கர் மூலமாக லோயம் போதைப்பொருட்களை ‘சப்ளை’ செய்து வந்துள்ளார்.
இதுதவிர முக்கிய பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கும் லோயம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். கன்னட திரை உலகத்தினர் வேறு யாரும் லோயமுடன் தொடர்பில் இருந்தார்களா? எத்தனை விருந்து நிகழ்ச்சிகளுக்கு அவர் போதைப்பொருட்களை சப்ளை செய்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் மந்திரியான ஜீவராஜ் ஆல்வாவின் மகனான ஆதித்யா ஆல்வாவின் பெயரும் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்போது ஆதித்யா ஆல்வா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே, காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவிசங்கர் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளது. ரவிசங்கர் மூலம் தான் ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அவருடைய பெயர் சேர்க்கப்படாததால் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ரவிசங்கரை போதைப்பொருள் விற்ற வழக்கில் கைது செய்துள்ளோம். மற்றொரு வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் ரவிசங்கர் பெயரை சேர்ப்பதில் சில சட்ட பிரச்சினைகள் உள்ளது. அதுபற்றி தற்போது தெரிவிக்க இயலாது என்றார்.

Related Tags :
Next Story