தேசியவாத காங்கிரசை, காங்கிரசுடன் இணைத்து சரத்பவாரை கட்சி தலைவராக்க வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்


தேசியவாத காங்கிரசை, காங்கிரசுடன் இணைத்து சரத்பவாரை கட்சி தலைவராக்க வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:48 AM IST (Updated: 6 Sept 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாதகாங்கிரசை, காங்கிரசுடன் இணைத்து சரத்பவாரை கட்சி தலைவராக்கவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ்அத்வாலேகூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சோனியா காந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரசை, காங்கிரசுடன் இணைத்து சரத்பவாரை கட்சி தலைவராக்க வேண்டும் என மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ தற்போது ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவராக விரும்பவில்லை. எனவே தேசியவாத காங்கிரசை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து சரத்பவாரை கட்சியின் தலைவராக்க வேண்டும். இது எனது அறிவுறுத்தல். இந்த முடிவை பவார் மற்றும் காங்கிரஸ் இணைத்து நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

Next Story