நாமக்கல் மாவட்டத்தில், டாக்டர் உள்பட 86 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில், டாக்டர் உள்பட 86 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Sept 2020 3:30 AM IST (Updated: 6 Sept 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கல்லாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீஸ்காரர்கள், திருச்செங்கோடு நகராட்சி பணியாளர், அரசு பஸ் டிரைவர் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் தலா 12 பேர், ராசிபுரத்தில் 10 பேர், குமாரபாளையத்தில் 6 பேர், பள்ளிபாளையத்தில் 4 பேர், பரமத்திவேலூர், பாண்டமங்கலம் மற்றும் சேந்தமங்கலத்தில் தலா 3 பேர், சுள்ளிபாளையம், குமாரவேலிபாளையம், சிலுவம்பட்டி, ஏளூர் மற்றும் ஆர்.புதுப்பாளையம் பகுதிகளில் தலா 2 பேர் மற்றும் நல்லம்பாளையம், கவுண்டம்பாளையம், ராயர்பாளையம், வெண்ணந்தூர், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 85 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,865 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 41 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 607 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story