மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை நிரப்ப வேண்டும் - பா.ம.க. இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்


மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை நிரப்ப வேண்டும் - பா.ம.க. இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Sept 2020 3:45 AM IST (Updated: 6 Sept 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. இணைய வழி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ம.க. முப்படையை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், பட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவர் அருள், மாநில செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாநில நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, அரசாங்கம், முருகசாமி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார்.

இதில் கட்சி நிர்வாகிகள், அன்புமணியின் முப்படை அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை இணையம் வழியாக தெரிவித்தனர். இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பதிலளித்து பேசினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குட்டைகள், குளங்களிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை நிரப்ப வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நெக்குந்தி கிராமத்தில் இந்திய ராணுவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துகளை தடுக்க அந்த சாலையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். தொப்பையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். இண்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். தர்மபுரி-ஒகேனக்கல் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் இமயவர்மன், செல்வக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் டி.ஜி.மணி, காமராஜ், மாநில துணை அமைப்பு தலைவர் வாசுநாயுடு, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், பட்டாளி சமூக ஊடகப்பேரவை மாநில செயலாளர் தயாளன், மாநில நிர்வாகிகள் ஓ.கே.சுப்பிரமணியன், அன்பழகன், செந்தில்குமார், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புகார்த்திக், ராஜீவ்காந்தி, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை மாநில துணைத்தலைவர் சக்தி, மாநில துணை அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், ஊடகப்பேரவை ஒன்றிய செயலாளர் தமிழரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைககள் குறித்து பேசினார்கள். முடிவில் மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Next Story