கொரோனா பரவல் தடுப்புக்கான சிறப்பு பரிசோதனைகளை நடத்த 75 மருத்துவ குழுக்கள் அமைப்பு - அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்


கொரோனா பரவல் தடுப்புக்கான சிறப்பு பரிசோதனைகளை நடத்த 75 மருத்துவ குழுக்கள் அமைப்பு - அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 6 Sept 2020 3:45 AM IST (Updated: 6 Sept 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான சிறப்பு பரிசோதனைகளை நடத்த 75 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிகாசலம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கலால் உதவி ஆணையர் தேன்மொழி, தர்மபுரி அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் தினமும் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களை நடத்த 75 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை உபாதைகள் உள்ளவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த பரிசோதனையின்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உரிய கண்காணிப்பு பணியை மேற்கொண்டு அரசு அறிவித்துள்ள கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முழுவீச்சில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

Next Story