திண்டுக்கல்லில், பிறந்தநாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சி. பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்,
வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் விழா, திண்டுக்கல்லில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமாறன், மாவட்ட மின்சார பிரிவு செயலாளர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.மருதராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வ.உ.சி. சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழு தலைவர் சந்திரசேகரன், செயலாளர் தனபாலன், பொருளாளர் பெருமாள்சாமி, திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் என்ற பிரேம் மற்றும் எம்.வி.எம். செல்லமுத்தையா, ராஜேந்திரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் வி.டி.ராஜன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பழனிசாமி, வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து கவுரவ தலைவர் ஜோதிமுருகன் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார். இதில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மேற்கு மாவட்ட தலைவர் சண்முகபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட காமராஜர்-சிவாஜி தேசிய பேரவை சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா, திண்டுக்கல் தெற்குரதவீதியில் நடைபெற்றது. இதற்கு மாநகர தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரவை நிறுவனர் வைரவேல், கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டுவில் வெள்ளாள பெருமக்கள் சங்கம் மற்றும் வ.உ.சி. பேரவை சார்பில் நடந்த வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழாவுக்கு பேரவை தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ஜெயமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் இனியன் காமாட்சி, பொருளாளர் பிச்சைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் வத்தலக்குண்டுவில் அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுந்தர், சின்ராஜ், வ.உ.சி. பேரவை மாவட்ட நிர்வாகி ஜெயமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டு வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Related Tags :
Next Story