திருப்பூரில் பரிதாபம்: ரெயிலில் அடிபட்டு மாணவன் பலி
திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருப்பூர்,
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவன் ஸ்ரீஅரி(வயது 15). சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை ஸ்ரீஅரி தனது நண்பனுடன் சேர்ந்து ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளான். பின்னர் நண்பனை அனுப்பி விட்டு ஸ்ரீஅரி மட்டும் மீண்டும் கடைக்கு சென்றுள்ளான்.
பின்னர் வெகுநேரமாகியும் ஸ்ரீஅரி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவனின் தாயார், அவனுடைய நண்பர்களிடம் விசாரித்துள்ளார். கடைசியாக கடைக்கு செல்வதாக ஸ்ரீஅரி கூறியதால் கடை மற்றும் தண்டவாளம் அருகே தேடியுள்ளனர். இதில் ஸ்ரீஅரி தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் உடலை பார்த்து தாயார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீஅரி கடைக்கு சென்று விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதியதில் இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story