நெடிமோழியனூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தள்ளிவைக்க வேண்டும் - அமைதி குழு கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்
நெடிமோழியனூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைதி குழு கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
திண்டிவனம்,
மயிலம் ஒன்றியம் நெடிமோழியனூரில் ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணியும் தொடங்கப்பட்டது. இதற்கு நெடிமோழியனூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1-ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இது தொடர்பாக திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அமைதி குழு கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காணலாம் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே பொறியாளர் திம்மையா முன்னிலை வகித்தார். இதில் மண்டல துணை தாசில்தார் முருகன், செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விஜி நெடிமோழியனூர் கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிராம மக்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை திட்டம் பல இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைந்தால் மழை காலங்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடும். கனரக வாகனங்கள், நெல் அறுவடை வாகனங்கள் சென்று வரமுடியாது. சுரங்கப்பாதை அமைந்தால் மழைக்காலங்களில் 20 கிராம மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தற்போது உள்ளதுபோல் ரெயில்வே கேட் இருக்கட்டும். இல்லையென்றால் சுரங்கப்பாதை திட்டத்தை கைவிட்டு, ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாருங்கள். மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்க தயாராக உள்ளோம். அதுவரை ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகளும் ஒத்துக்கொண்டனர்.

Related Tags :
Next Story