மும்பை- மன்மாட் இடையே சிறப்பு ரெயில்கள் மத்திய ரெயில்வே அறிவிப்பு


மும்பை- மன்மாட் இடையே சிறப்பு ரெயில்கள் மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2020 12:59 AM IST (Updated: 7 Sept 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- மன்மாட் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மாட்டிற்கு வருகிற 12-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தினமும் மாலை 6.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:02109) இரவு 10.50 மணிக்கு மன்மாட் சென்றடையும்.

மற்றொரு ரெயில் (02110) தினமும் அதிகாலை 6.02 மணிக்கு மன்மாட்டில் இருந்து காலை 10.45 மணிக்கு சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.

நிற்கும் இடங்கள்

இந்த ரெயில் தாதர், கல்யாண், தேவ்லாலி, நாசிக் ரோடு, நிபாட், லசால்காவ் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கு முன்பதிவு விரைவில் தொடங்கும். பயணிகள் கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story