பரமக்குடி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது பொதுமக்கள் அவதி
பரமக்குடி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி, பார்த்திபனூர், அரியனேந்தல், மஞ்சூர், பாண்டி கண்மாய், சத்திரக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், பரமக்குடியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக பாலன்நகர், பொன்னையாபுரம், எமனேசுவரம், ஜீவா நகர், சிலோன் காலனி, வாரச்சந்தை திடல் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.பின்னர் நகராட்சி ஆணையாளர் ராமர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துச்சென்று தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Related Tags :
Next Story