திருத்தங்கல் தே.மு.தி.க. முன்னாள் செயலாளர் நடுரோட்டில் வெட்டிக் கொலை பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை
திருத்தங்கல் நகர தே.மு.தி.க. முன்னாள் செயலாளர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அய்யாபிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர், சங்கிலிராஜன் (வயது 48). இவர் திருத்தங்கல் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்தவர்.
கடந்த சில மாதங்களாக இவர் கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்தார். மேலும் திருத்தங்கலில், விருதுநகர் ரோடு பகுதியில் அரிசி கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சங்கிலிராஜன், திருத்தங்கல்-அதிவீரன்பட்டி ரோட்டில் நேற்று காலையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சங்கிலிராஜன் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, சங்கிலிராஜன் படுகொலை குறித்து விசாரணை நடத்தினார். மேலும் விசாரணைக்கு போலீஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டது.
ஒரு கும்பலாக இணைந்து சங்கிலிராஜனை நடுரோட்டில் படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக அந்த இடத்துக்கு வந்தார், அவரை யாராவது நைசாக பேசி அங்கு வரவழைத்து இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றினார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட சங்கிலிராஜனுக்கு முத்துராமலட்சுமி (45) என்ற மனைவியும், ராஜலட்சுமி (19) என்ற மகளும், உதயச்சந்திரன் (12) என்ற மகனும் உள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து பிரச்சினையால் இந்த படுகொலை நடந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story