சமயநல்லூர் பகுதியில் வீடுகளில் திருடிய கொள்ளையன் கைது; 47 பவுன் நகை, 2 துப்பாக்கிகள் பறிமுதல்
மதுரை அருகே சமயநல்லூர் பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வாலிபரிடம் இருந்து 47 பவுன் நகை, 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாடிப்பட்டி,
மதுரை அருகே சமயநல்லூர் பகுதியில் வீடுகள், நடந்து செல்பவர்களிடம் நகை மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி வழிப்பறி செய்வது நடந்து வந்தது. இதைதொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆலோசனையின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் குற்றவியல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், வெங்கடேஷ், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று சமயநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நிற்காமல் சென்றார். அவரை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது, 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரித்தபோது கருப்பாயூரணி அருகே கல்மேடு பகுதியை சேர்ந்த ஆபிரகாம் மகன் பெஞ்சமின்(வயது 30) என்பதும், சமயநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து செல்வோரிடம் நகைகளையும் மற்றும் வீடுகளில் புகுந்து செல்போன், லேப்டாப், கைக்கெடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடியதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து பெஞ்சமினை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 47 பவுன் நகைகள், 10 செல்போன்கள், 3 லேப்டாப், 2 கைக்கெடிகாரங்கள், ஒரு மோட்டார் சைக்கிள், 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story