ஆம்பூர் அருகே பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த காவலாளி எரித்துக்கொலை - வாலிபர் கைது


ஆம்பூர் அருகே பயங்கரம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த காவலாளி எரித்துக்கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2020 8:55 AM IST (Updated: 7 Sept 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த தோல் தொழிற்சாலை காவலாளி கெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இங்கு காவலாளியாக ராஜேஷ் (27) என்பவர் பணியாற்றி வந்தார்.

தினமும் மணிகண்டனின் மனைவி வேலைக்கு செல்லும்போது அவருடன் காவலாளி ராஜேஷ் பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை அவர் பொருட்படுத்தவில்லை. அவர்கள் இருவருடைய தகாத உறவு தொடர்ந்துள்ளது.

எவ்வளவோ சொல்லியும் ராஜேஷ் கேட்காததால் அவரை கொலை செய்ய மணிகண்டன் முடிவு செய்தார். அதன்படி பெட்ரோலை எடுத்துக்கொண்டு சென்ற அவர் அதனை ராஜேஷ் மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் பற்றிய தீயால் ராஜேஷ் அலறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்துவிட்டார்.

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், மனைவியுடன் இருந்த தகாத உறவை கைவிடும்படி கூறியும் அவர் தொடர்ந்ததால் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த காவலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story