குர்ரம்கொண்டாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை


குர்ரம்கொண்டாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2020 9:58 AM IST (Updated: 7 Sept 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

குர்ரம்கொண்டாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்ரீகாளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் திகுவபுருஜுபள்ளியைச் சேர்ந்தவர் சண்முகரெட்டி (வயது 30). இவர், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா தொற்று ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்து 5 மாதமாக வீட்டில் இருந்தார். அவர், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை.

நேற்று முன்தினம் இரவு கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். குர்ரம்கொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் குர்ரம்கொண்டா மண்டலம் செர்லோபள்ளி பஞ்சாயத்து தத்தாலவாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம ரெட்டியய்யா (28). இவர், தனது பெற்றோர் நடத்தும் உணவகத்தைக் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த குடும்ப தகராறால் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குர்ரம்கொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story