வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது கர்நாடகத்தில் ஒரே நாளில் 141 பேர் கொரோனாவுக்கு பலி
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 141 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தல் ஒட்டு மொத்தமாக வைரஸ் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 5,773 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 141 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்பு 6,534 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 126 பேர், பல்லாரியில் 266 பேர், பெலகாவியில் 75 பேர், பெங்களூரு புறநகரில் 77 பேர், பெங்களூரு நகரில் 2,942 பேர், பீதரில் 32 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், சிக்பள்ளாப்பூரில் 82 பேர், சிக்கமகளூருவில் 101 பேர், சித்ரதுர்காவில் 50 பேர், தட்சிண கன்னடாவில் 152 பேர், தாவணகெரேயில் 199 பேர், தார்வாரில் 29 பேர், கதக்கில் 87 பேர், ஹாசனில் 128 பேர், ஹாவேரியில் 53 பேர், கலபுரகியில் 141 பேர், குடகில் 11 பேர், கோலாரில் 26 பேர், கொப்பலில் 139 பேர், மண்டியாவில் 169 பேர், மைசூருவில் 221 பேர், ராய்ச்சூரில் 22 பேர், ராமநகரில் 11 பேர், சிவமொக்காவில் 150 பேர், துமகூருவில் 25 பேர், உடுப்பியில் 113 பேர், உத்தரகன்னடாவில் 77 பேர், விஜயாப்புராவில் 112 பேர், யாதகிரியில் 137 பேர் உள்ளனர்.
8,015 பேர் குணம் அடைந்தனர்
கொரோனாவுக்கு பெங்களூருவில் 48 பேர், சிவமொக்கா தட்சிண கன்னடா, பெலகாவியில் 8 பேர், தார்வார், கொப்பலில் தலா 10 பேர், மைசூருவில் 9 பேர் உள்பட மொத்தம் 141 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 45 ஆயிரத்து 421 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒரே நாளில் 8,015 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 770 ஆக அதிகரித்துள்ளது. 97,001 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 794 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தினமும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 141 பேர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story