போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது நடிகை ராகிணி திவேதிக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்
போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ராகிணி திவேதிக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னட திரை உலகில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.
விசாரணைக்குஒத்துழைக்கவில்லை
குறிப்பாக நடிகை ராகிணி திவேதி கடந்த 4-ந் தேதி மாலையில் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். முதலில் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் போது போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை ராகிணி திவேதி ஒப்புக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இதற்கு முன்பு தான் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாகவும், தற்போது போதைப்பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் ராகிணி திவேதி போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில், நேற்றுடன் நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் நிறைவு பெற்றது. ஏற்கனவே அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததாலும், சில தகவல்களை முதலில் கூறிவிட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
5 நாட்கள் போலீஸ் காவல்
இதையடுத்து, நேற்று மதியம் பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெகதீஸ் முன்னிலையில் காணொலி காட்சி மூலமாக நடிகை ராகிணி திவேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு கடந்த 3 நாட்களாக அவர் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தாலும், மேலும் 10 நாட்கள் நடிகை ராகிணி திவேதியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும், அவ்வாறு வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே அவரது செல்போனில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்து விட்டதாகவும் நீதிபதியிடம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நடிகை ராகிணி திவேதியை மேலும் 5 நாட்கள் (அதாவது வருகிற 11-ந் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டார். இதனால் மேலும் 5 நாட்கள் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
நடிகையிடம் விசாரணை
தற்போது நடிகை ராகிணி திவேதி சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளார். வருகிற 11-ந் தேதி வரை அவர் அங்கேயே தங்க வைக்கப்பட இருப்பதாகவும், அங்கு வைத்து விசாரணை நடைபெற உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று நடிகை ராகிணி திவேதியிடம் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா தலைமையிலான போலீசார், போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகை ராகிணி திவேதி கைதாகும் முன்பே, அவரது சார்பில் நிபந்தனை முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவை, நடிகை ராகிணி திவேதியின் தந்தை திரும்ப பெற்றுள்ளார். அதே நேரத்தில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் கோரி செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்றாலும், வருகிற 11-ந் தேதி வரை நடிகை ராகிணி திவேதி போலீஸ் காவலில் இருப்பதால், அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

Related Tags :
Next Story